திருச்சி மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்ஜங்ஷன், மேரிஸ் மேம்பால பணிகள் துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கோரி
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக துவக்கிட கோரி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பற்றாக்குறை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை உடனடியாக நியமித்திட கோரி
திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை துவங்க கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள அடிமனை மற்றும் கோயில் மனை, குத்தகை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வலியுறுத்தி
திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து ஊராட்சி அமைப்புகளில் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிட கோரி திருச்சி மாவட்டத்தில் வீடில்லா மக்கள் அனைவருக்கும் குடிமனை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்கிட கோரி
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியும் முழுமையான வேலை வழங்கிடவும், நகர் புறங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் மேற்கு தொகுதிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் கோரிக்கை கையெழுத்து இயக்கம் ஜூலை 21 ம் தேதி காலை 10 மணிக்கு மேற்குப் பகுதி செயலாளர் இரா சுரேஷ் முத்துசாமி தலைமையில் துவங்கியது. ஜூலை 21ஆம் தேதி மாலை எட்டாவது வார்டு பாண்டமங்கலம் பகுதியில் தோழர் R.சரண்சிங் தலைமையிலும் ஜூலை 22 மாலை 6:00 மணிக்கு 9 வது வார்டில் ஆனந்தன் தலைமையிலும்
ஜுலை 23 காலை 25 வது வார்டு பகுதியில் கங்காதேவி தலைமையிலும்
மாலை 6 மணிக்கு 10 வது வார்டு பகுதியில் நிர்வாக குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையிலும்
ஜூலை 24 காலை 10 மணிக்கு 25 வது வார்டில் நிர்வாக குழு உறுப்பினர் எம். சுமதி தலைமையிலும்
மாலை 6 மணிக்கு 10 வது வார்டு பகுதியில் மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம் தலைமையிலும்
25 ம் தேதி 23 வது வார்டு பகுதியில் தோழர் காந்தி தலைமையிலும்
24 வது வார்டு பகுதியில் தோழர் துரைராஜ் தலைமையிலும்
ஜூலை 26 ஆம் தேதி மாலை 25 வது வார்டு சண்முக நகர் பகுதியில் சாந்தி தலைமையிலும்
மற்றும் 10 வது வார்டு பகுதியில் காலை நிர்வாக குழு உறுப்பினர் ஆயிஷா தலைமையிலும்
ஜூலை 27ஆம் தேதி காலை 25 வது வார்டு பகுதியிலும் மாலை 23 வது வார்டு பகுதியிலும் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஜூலை 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஸ்வ நாயக்கன் பேட்டை தெருமுனையில் தப்பாட்ட பறையிசையுடன் தோழர் ராமச்சந்திரன் தலைமையிலும் மக்களிடம் கையெழுத்து பெறும்பணி சிறப்பான முறையில் மேற்கு பகுதியில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேற்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் ஜூலை 30 வரை பல்லாயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று ஜூலை 31-ல் பெரும்திரள் பேரணி ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி திறுத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரனர் மாரிமுத்து தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இரா சுரேஷ் முத்துசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
<a href="https://www.threads.net/@trichy_vision
Comments