Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூரில் 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பூர் எழில்நகர் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் சமுதாய கூடத்தில், மாண்புமிகு பள்ளி கல்வித் துறை திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா இன்று (08.02.2026 ) நடத்தப்படுகிறது.

ஒரு குழந்தையின் வளர்ச்சி கருவாக உருவான நாளிலிருந்து ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான இந்நிகழச்சியில் தொலை நோக்கு பார்வையுடன் அனைத்து கார்பிணி தாய்மார்களும் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

பாதுகாப்பான தாய்மையை உறுதிசெய்தல். கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்கள் சென்றடையச்செய்து, அவர்கள் அதனை பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் முதல் 1000 பொன்னான நாட்களின் அவசியத்தை உணர்த்துதல், தாய்பாலின் நன்ைைமகள் மற்றும் அவசியம், இணை உணவின் அவசியம் போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே இவ்வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியினரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இந்த கர்ப்ப காலத்தில் நாய் வீட்டு சீராக மங்கல பொருட்களான வளையல், மங்கல நாண், மஞ்சன், குங்குமம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம் வேப்பம் காப்பு, மாலை மற்றும் 1000 பொன்னான நாட்களின் அவசியத்தை உணர்த்துதல் குறித்த கையேடு மற்றும் 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி அவர்கள், திருமதி.ஜனனி மகேஸ் பொய்யாமொழி அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி.மா.நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *