திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி தமிழகத்
தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்திய கூட்டணியை எதிர்கட்சிகள் நினைப்பது போல் சிதைக்க முடியாது. இந்த கூட்டணி தொகுதி பங்கீட்டிற்காகவோ அல்லது ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கி மட்டுமே அமைந்த கூட்டணி அல்ல. நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறையுள்ள கூட்டணி.
காங்கிரஸ் – திமுக இடையே நல்ல உறவு இருக்கிறது. இது மற்றகூட்டணியை போல கள்ள உறவு அல்ல.
மற்றவர்கள் போல் டெல்லியில்
ரகசிய சந்திப்பு நடத்திவிட்டு, முகத்தைக் கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு வருபவர்கள் அல்ல நாங்கள்.
கூட்டணியில் அவரவர் சில விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள் இதுதான் ஜனநாயகம் அதற்காக கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என நினைக்கக் கூடாது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் எண்ணம் எப்போதும் நிறைவேறாது.
பிரதமர் நரேந்திர மோடி தேவாலயத்திற்கு சென்றது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என கூறுவது தவறு கோவில் தேவாலயங்கள், மசூதிகளுக்கு செல்வது அவரது விருப்பம்.
இந்த கோயிலுக்கு தான் செல்லவேண்டுமென சொல்லி, யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. அது குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ் இதனை தான் வற்புறுத்துகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது. அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றலாமா? என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கை தோல்வி அடைந்துள்ளது. நட்பு நாடுகள் பகை நாடுகளாக மாறிவிட்டன.
திமுக கூட்டணியில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்கிற கேள்விக்கு 234 இடங்களிலும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என கூறி சென்றார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments