இனி வாட்ஸ்ஆப் வழியே கொரானா தடுப்பூசி சான்றிதழ்!!

இனி வாட்ஸ்ஆப் வழியே கொரானா தடுப்பூசி சான்றிதழ்!!

கொரானா  மூன்றாவது அலை தொற்று ஏற்படும்   எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க  தடுப்பூசி சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எளிமையாக வாட்ஸ் ஆப்பிலேயே தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முன்னர் அதற்கான சான்றிதழை பெற வேண்டுமானால் கோவின் தளத்திற்குச் சென்று லாகின் செய்ய வேண்டும் இது அனைவருக்கும் உடனே பயன்படுத்த சிரமமானதாக இருந்தது.

 தற்போது அதனை மத்திய சுகாதார அமைச்சகம் எளிமைப்படுத்தி உள்ளது.
 மத்திய சுகாதார அமைச்சர் 
 மன்சுக் மான்டவியா இதற்காக 9013151515 என்ற பிரத்தியேக வாட்ஸ்அப்  எண்ணை அறிவித்துள்ளார்.

MyGov கொரனோ உதவி மையம் மூலம் மூன்று எளிதான வழிகளில்   தடுப்பூசி சான்றிதழை பெறலாம்.

அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணை  முதலில்  செல்போனில் சேமிக்க வேண்டும்.

 பின்னர் அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் "Covid certificate"என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

 ஓடிபி பெறப்பட்டவுடன்  சில நொடிகளில் சான்றிதழை பெறலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK


டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn