திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பத்தாவது வார்டில் ஐ.ஜே.கே கட்சியின் சார்பில் கருணாகரன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் வார்டு பகுதி மக்களுக்கு பல்வேறு நல்ல திட்ட உதவிகளை செய்வதாகவும், செய்ய தவறினால் தனது பதவியை இரண்டரை ஆண்டில் ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார்.
சில திட்ட பணிகள் செய்து முடித்த நிலையில் சமுதாய கூடம், பெண்களுக்கான சுகாதார வளாகம் ஆகியவற்றை கட்டி தர முடியாமல் போனதால், தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியின் படி தனது பதவியை ராஜினாமா செய்ய நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கினார். இதனால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments