திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் T.ரவிச்சந்திரன் அவர்கள் திருச்சி சிறைச்சாலையில் சாதி ரீதியாக கைதிகள் துன்புறுத்தப்படுவதை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த தகவலின்படி திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளிடம் திருச்சி மத்திய சிறை Deputy ஜெய்லர் மணிகண்டன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2025ல் கைதிகளிடம் சாதி பாகுபாடு பார்த்து அடித்து துன்புறுத்தியும் 14/05/2025ல் கும்பகோணத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற தண்டனை கைதியை நபரை ஒரு தனி அறையில் வைத்து அடித்தும்,
துன்புறுத்தியும், சாதி பாகுபாடும் முறையில் இழிவாக பேசியும் மிகவும் காட்டுமிராண்டித் தனமாக” நடந்து உள்ளார். மேலும் தற்போது திருச்சி மத்திய சிறைச்சாலையில் கடந்த 4/06/2025ல் கைதிகளுக்கு இடையே பிரச்சனை வந்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டது உண்மை இருக்கும் பட்சத்தில், ஆனால் மணிகண்டன் Deputy ஜெயிலர் அவர்கள் பிரச்சனை செய்த கைதிகளை தனி அறையில் வைத்து உடல் பகுதிகளில் குறிப்பாக கைதிகளின் கைகளில் பல இடங்களில் கிழித்து கொலை முயற்சியில்” ஈடுபட்டுள்ளார். தற்போது கடந்த 26/07/2025ல் ஆயுள்
தண்டனை கைதி ஹரி பிரசாத் நபரை Deputy ஜெயிலர் மணிகண்டன் அவர்கள் அடித்து துன்புறுத்தியதால் அந்த கைதி தற்போது உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல்கள் வெளி வருகிறது. மேலும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள ஒரு சிலர் கைதிகள் இதைப் பற்றி சிறை துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் தண்டனை சிறைவாசிகளை உடனடியாக வேறொரு சிறைக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று சிறைவாசிகளை சிறைதுறை அதிகாரி மணிகண்டன் அவர்கள் மிரட்டியுள்ளார்.மேலும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளிடம் சீர்திருத்த துறை அதிகாரியாக Deputy ஜெய்லர் மணிகண்டன் அவர்கள் செயல்படாமல், சித்ரவதை துறை அதிகாரியாக செயல்படுவது வேதனைக்குரிய செயலாக உள்ளது.
திருச்சி மத்திய சிறைதுறை அதிகாரி மணிகண்டன் அவர்கள் தொடர்ச்சியாக காட்டு மிராண்டித் தனமாக செயல்பட்டு வருவதால் இனியாவது இது தொடர்பாக உரிய விசாரணை செய்து அவர் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும் குறிப்பாக “திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்கள் உடனடியாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் நேரடியாக சென்று விசாரணை செய்து தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுவதை தடுக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் இந்த நிலைமை நீடித்தால் சிறைதுறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது என்றும்,
இல்லையென்றால் சிறைதுறை அதிகாரிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இது தொடர்பாக உரிய விசாரணை செய்து எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க கேட்டுக் கொள்கிறேன்இந்த பதிவில் எந்த ஒரு அதிகாரிகளையும் குறை கூறவில்லை, விமர்சிக்கவும் இல்லை,திருச்சி மத்திய சிறைச்சாலையில் மனித உரிமை மீறலில் Deputy ஜெய்லர் திரு. மணிகண்டன் அவர்கள்
ஈடுபடாமல் தடுக்க இனியாவது நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மனித உரிமை ஆணையர்,திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் திருச்சி சம்பந்தப்பட்ட துணை ஆணையர், திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சிறைதுறை காவல் விஜயலென்ஸ் சிறப்பு அதிகாரி, சிறைதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சர், உயர்திரு. சிறைதுறை DGP அவர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று வழக்கறிஞர் T.ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
Comments