திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ். கதிரவன் அவர்கள், மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரும் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் வருகிற ஏப்ரல் 13, 2026 (திங்கட்கிழமை) அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.40 மணி வரை பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. அவரது சுற்றுப்பயண விவரங்கள் பின்வருமாறு-
மாலை 4.00 மணிக்கு அழகியமணவளம் பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து 4.15 மணிக்கு சஞ்சீவி, 4.25 மணிக்கு கோவத்தகுடி, ஆவாரங்கரை, அத்தவாயல், கோபாலபுரம் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 4.50 மணிக்கு யாகூர், தென்னூர் நகர், கந்தசாமி கோவில், கந்தசாமிபுரம், சுந்தரராஜபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெறுகிறது.மாலை 5.10 மணிக்கு செல்லப்பண்ணன், 5.20 மணிக்கு வரகனேரியாபுரம், 5.30 மணிக்கு குமரக்குடி, 5.40 மணிக்கு நெசவாளர் காலனி, 5.50 மணிக்கு நெசவாளர்–சங்கசாமி பகுதி, 6.00 மணிக்கு மன்னிப்பாக்கம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.6.10 மணிக்கு திருவாசி பகுதியில் மக்களை சந்திக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 6.20 மணிக்கு திருவாசி கிழக்கு, 6.30 மணிக்கு திருவாசி மேற்கு, 6.40 மணிக்கு கிருஷ்ணாபுரம், 6.50 மணிக்கு துவரப்பூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.மாலை 7.00 மணிக்கு மேல்வட்டு பகுதியில் தொடங்கி, 7.10 மணிக்கு பாண்டியபுரம், 7.20 மணிக்கு கண்ணன்குடி, 7.30 மணிக்கு பஞ்சப்பட்டி, 7.40 மணிக்கு நெடுவேலி, 7.50 மணிக்கு செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறும்.இறுதியாக 8.00 மணிக்கு பூனாம்பாளையம், 8.10 மணிக்கு பாட்டை மதகு, 8.20 மணிக்கு வடக்கிபட்டி, 8.30 மணிக்கு அருந்ததியர் தெரு, 8.40 மணிக்கு ராஜாமங்கலம் பகுதியில் சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்வு அளிப்பதே முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments