இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமான SKILLSET ACADEMY-ம் வணிகவியல் (கணினி) துறை, தூய வளனார் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாணவ மாணவியருக்கான பேரிடர் மேலாண்மை கருத்தமர்வு 18-12-2021 மாலை 03.00 மணி அளவில் நடைபெற்றது.
தூய வளனார் கல்லூரி வணிகவியல் (கணினி) துறைத் தலைவர் பேராசிரியர். Dr. J. ரஜீஸ் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சேவை மையத்தின் பிரிவு தளபதி அ. இஸ்ரேல் சிறப்பு கருத்தமர்வினை வழிநடத்தினார்.
SKILLSET ACADEMY-யின் நிர்வாகி K. ரஞ்சித் குமார் மற்றும் இயக்குனர் A. அந்தோணி ஜெய்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் (கணினி) துறையின் மாணவர் மன்ற தலைவர் பேராசிரியர். Dr. F.X. வெர்ஜின் பிராகா மற்றும் துணைத் தலைவர் பேராசிரியர். R. அருள் மற்றும் பேராசிரியர். J. அற்புத சகாயராஜ் ஆகியோர் இந்த கருத்தமர்வினை ஒருங்கிணைத்தனர்.
பேரிடர் காலத்தில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதைப் பற்றி செயல்முறை வாயிலாக இக் கருத்தமர்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments