நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் தேர்தலை சந்திக்க உள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுடன் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கான சீட் பங்கீடு தொடர்பாக திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில் திருச்சியில் முஸ்லிம் லீக் 30வது வார்டு பாலக்கரை, மற்றும் 47 வது வார்டு சுப்ரமணியபுரம் ஆகிய இரண்டு வார்டுகள் திமுக கூட்டணியில்  கேட்டிருந்த நிலையில் இன்று (29.01.2022) காலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பீமநகர் 52 வது (பெண்) வார்டு ஒரு வார்டு மட்டும் ஒதுக்கப்படுவதாக திமுக கூறியது. ஆனால் முஸ்லிம் லீக் இரண்டு வார்டுகள் வாங்குவதில் உறுதியாகவுள்ளது.
மேலும் திமுகவிடம் கேட்கப்பட்ட வார்டை தர மறுத்தால் அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும் முஸ்லிம் லீக் அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்ட வார்டு ஒதுக்கப்பட்டதால் இக்கட்சி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments