திருச்சியில் பெட் கேலக்ஸி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான நாய்கள் கண்காட்சி இன்று மொரைஸ் மைதானத்தில் நடைபெற்றது.
பொம்மேரியன், ஜெர்மன் ஷெப்பர்ட், ஜெயின் பெர்னாட், ஸ்பேனியல், லேபரடார் என வித்தியாசமான வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டின நாய்களும் கலந்துகொண்டன.
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் அதே நேரம் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாட்டு நாய்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நடத்தப்பட்ட இந்த நாய் கண்காட்சியில், நாய்களின் உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், நாய்களின் உடல் தகுதி வயதுக்கேற்ப வளர்ச்சி, நிறம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு இனங்களிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டன.
முன்னதாக இந்த நாய் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்பான முறையில் கீழ்படிதல் கட்டளைகளை செயல்படுத்திய காவல்துறையின் நாய்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments