முசிறி தொகுதி திமுக வேட்பாளர் கருணைராஜா சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்குச் சேகரிப்பு,எந்த சூழ்நிலையிலும் பிஜேபி நுழைந்தால் அந்த மாநிலமே கெட்டுவிடும் என முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் பேச்சுதிருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட தொட்டியம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் முசிறி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணைராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,

திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், எம்எல்ஏ வுமான காடுவெட்டி தியாகராஜன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து திமுகவின் ஐந்தாண்டு செய்த நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு உரையாற்றினார், தொடர்ந்து ஏழூர்பட்டி,மாராய்ச்சிப்பட்டி, குண்டுமணிப்பட்டி மற்றும் உடையகுளம் புதூர் ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வேட்பாளர் வாக்கு கேட்டார்கள், இந்த நிகழ்வில் தொட்டியம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்

ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர், செல்லும் இடமெல்லாம் வேட்பாளருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments