பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைக்கு திமுக, அதிமுக, உட்பட பல்வேறு கட்சிகள் முத்துராமலிங்க தேவரின் அமைப்புகள் மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி. ராம்குமார் மற்றும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments