Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூரில் திமுக எம்எல்ஏ கதிரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ கதிரவன் அமைச்சர் முன்னிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முதன் முதலாக 2021 ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கதிரவன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுக தலைமை கழகம் வாய்ப்பளித்தது.

 

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு மண்ணச்சநல்லூர் பூங்கா காந்தி சிலையிலிருந்து நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுடன் வேட்பாளர் கதிரவன் ஊர்வலமாக வந்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலால் உதவி ஆணையருமான சிவா அவர்களிடம் அமைச்சர் கே.என். நேரு,முன்னிலையில் திமுக வேட்பாளர் கதிரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது வேட்பாளர் கதிரவனின் தந்தையும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணைவேந்தருமான சீனிவாசன் கதிரவனின் மனைவி ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *