புதுக்கோட்டை விழா கோலமாக உள்ளது ஜார்ஜ் கோட்டையை பிடிக்க போகிறோம் அதனால் புதுக்கோட்டை விழா கோலமாக உள்ளது, பல கோட்டைகளைப் பிடித்து சாதனைப்படுத்த அமித்ஷா அவர்கள் வருகிறார்கள் அதனால் இன்று திருச்சி மலைக்கோட்டையை தரிசனம் செய்து விட்டு செல்கிறோம் புதுக்கோட்டை செல்கிறோம் புதுக்கோட்டையில் சார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க போகிறோம்…
அதனால் நிச்சயமாக ஒரு வெற்றி கிடைக்கும்
தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது, இதில் உச்சபட்சம் என்பது தேர்தல் ஸ்டண்ட் ஆக நேற்று அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டமா பழைய ஓய்வூதிய திட்டமா அல்லது புதிய என்ற குழப்பத்தை திட்டமாக அறிவித்து இருக்கின்றனர்
ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அவர்களை ஏமாற்றாமல் ஒழுங்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி
மகாத்மா காந்தி பெயரை மாற்றி அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார் நாட்டின் பிரதமர், இவர்கள் பெயரை மாற்றி அதனை சுருக்கி ஊழியரிடம் பணத்தைப் பெற்று மீண்டும் அவர்களுக்கு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் இதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர், இன்று பல்வேறு ஓய்வூதிய சங்கங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் உண்மையான பழைய ஓய்வு திட்டம் இல்லை என கூறி வருகின்றனர், பழைய மந்தையில் புதிய கல் என்று எடுத்துக் கொள்ளலாம்.
நிதி பற்றாக்குறையில் தமிழகம் தள்ளாடுகிறது என்ற கேள்விக்கு
9.1/2 லட்சம் கோடி கடனை வாங்கி இருக்கிறார்கள் மக்கள் மீது கடனை சுமத்தி இருக்கிறார்கள் ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கொண்டவர்கள் கூறுவது கடன் வாங்குவது பிரச்சனை இல்லை என கூறி வருகின்றனர், தமிழக அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்திருந்தால், போதைப் பொருளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல் பட வேண்டும் என தமிழக முதல்வர் பேசியிருக்கிறார், ஆட்சியை நடத்துவதற்கும் மத்திய மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும் அந்த இணக்கம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் நிலை தான் இங்கு, நாங்கள் செய்கிறோம் என ஆட்சியாளர்கள் கூறுவது மக்கள் வரிப்பணம் தான்
ஒரு துறைக்கு வழங்கும் போது மற்றொரு துறைக்கு சுமையாக போகும். இந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் மீது தொடர்ந்து அடிப்பது எந்த விதத்தில் நியாயம் அவர்களுக்கு என்ன பதில், தேர்தல் சமயமாக பூத்து வேலை மற்றும் ஓட்டு வேலையாக யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள் ஓட்டிற்கும் பூத்திருக்கும் சாதகமாக இல்லாதவர்களிடம் இவர்கள் சாதகமாக இருக்க மாட்டார்கள் இதற்கு உதாரணமாக துப்புரவு பணியாளர்களை சுட்டிக்காட்டலாம்
என்னுடைய வாதம் மற்றும் எனது கவனம் என்பது இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது அறிவிப்பது, இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பலரை அழைத்து மகிழ்ச்சியாக பேசுகிறார் 41/2 ஆண்டு என்ன செய்தீர்கள், இன்னும் பல அறிவிப்புகள் வரலாம் இன்னும் பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன், மேலும் இந்த ஓய்வூதிய திட்டம் என்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அரசாணை இல்லை மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்ற சந்தேகம் இருக்கும் அதனால்தான் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.
வைகோ நடை பயணம் மேற்கொள்வது எதற்கு நடைபயணம் மேற்கொள்கிறீர்கள் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் அவர் அறிவாலயம் தான் செல்ல வேண்டும், உங்களைச் சார்ந்தவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் சாராய ஆலையை நோக்கி தான் நடை பயணம் செல்ல வேண்டும், சாராய ஆலையை மூட மாட்டீர்கள் மதுக்கடைகளை குறைக்க மாட்டீர்கள் ஆனால் திருச்சியில் இருந்து நடைபாதை துவக்கி வைத்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சென்னை சென்ற பின்பு அங்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பிடிபடுகிறது, எதையும் செய்ய மாட்டேன் என்று கூறுவது பேரளவில் செய்வது அப்பட்டமான பொய் நாடகம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை 10 லட்சம் மடிக்கணினி வழங்க இருக்கிறார்கள், நான் புதுச்சேரி ஆளுநராக இருந்தபோது அனைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கினேன், நாளை வழங்கப்படும் இந்த மடிக்கணினி உலகத்தரம் வாய்ந்த நிறுவனம் மடிக்கணினி எனக் கூறுகிறார்கள், தமிழகதை சேர்ந்தவர் சிவ்நாடார் நிறுவனம் திருச்செந்தூருக்கு 300 கோடி நிதி வழங்கியுள்ளார் அவரது மடிக்கணினி உலக தரம் வாய்ந்தது இல்லையா ஏன் அதை கொள்முதல் செய்யவில்லை, அப்படி இல்லாமல் உலகத்தரம் வாய்ந்தது என்றால் எதை குறிப்பிடுவீர்கள், பங்குத்தொகை அதிகமாக கொடுத்தால் சேர்த்துக் கொள்ளும் லேப்டாப் கொள்முதல் விஷயத்தில் தமிழகத்துக்கு உதவும் அவரிடமிருந்து ஏன் பெறவில்லை என்பது என் மனதில் கேள்வியாக உள்ளது.
நான் ஆளுநராக இருந்தபோது கூட நான் பொதுமக்களுடன் தான் போனேன்,
சேகர் பாபு எண்ணம் என்பது கோவில் எல்லாம் இவரது சொத்து என்பது போலவும், இவர் நினைத்தவுடன் மக்கள் கோவிலுக்கு போக வேண்டும் என்பது இவர் நினைப்பது போல் தான் அனைவரும் நடக்க வேண்டும் என்பதும் உள்ளது, சுசீந்திரர் கோவிலில் நல்ல நேரத்திற்கு பின்பு ராகு காலத்திற்குப் தேர் இழுத்தால்தான் அவருக்கு கெட்ட நேரம் அதிக நேரம் பக்தர்கள் காத்திருந்தது அவருக்கு தெரியுமா
அனைத்து தேர் படங்களையும் நான்தான் இழுக்க வேண்டும் அனைத்து கோவில் கும்பாபிஷேகலையும் நான் தான் நடத்த வேண்டும் என்ற எண்ண ம் உள்ள நிலையில் முதலமைச்சரை எங்கும் அழைத்து வர மாட்டேன் என்பதற்கு நான் ஒரு சவால் விடுகிறேன், உண்மையிலேயே மதச்சார்பற்ற ஆட்சி நடக்குது என்றால் அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்து வரவேண்டும் தமிழக முதல்வர் இப்தார் விருந்துக்கு செல்கிறார் கிறிஸ்துமஸ் விழாவிற்கு செல்கிறார் பாராபட்சமாக நடந்து கொள்கிறார்
மத சார்பு உடையவர்களாக நடந்து கொள்கிறார்கள் அது திமுக ஆட்சி தான், மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரை வைப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
தேர்தல் அறிக்கை தயாரிக்க தமிழக மக்களிடம் திமுக கருத்து என்ற கேள்விக்கு…
ஏற்கனவே வழங்கிய தேர்தல் அறிக்கையில் மிச்சம் என்ன உள்ளது என்று பார்க்க சொல்லவும்.
ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையில் பாதி நிறைவேற்ற வில்லை மீண்டும் புதிய தேர்தல் அறிக்கை தயாரித்து அதுவும் நிறைவேற்ற மாட்டார்கள் ஏமாற்றும் தேர்தல் அறிக்கை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments