Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வீரலெட்சுமியை வைத்து சீமானை வளைத்த திமுக !

சமீபகாலமாக மீம்ஸ்களில் அதிகம் அடிபட்டவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மஹா… ஆமாம் தலைவரே அதுக்கு காரணம் நடிகை விஜயலெட்சுமி, மீம்ஸ் மட்டுமல்ல வைரல் பேட்டிகளிலும் வச்சு செய்தார்கள் நெட்டிசன்கள்.

ஆமாம் மஹா, சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக பலகாலமாக புகார் கூறி வந்தவர் விஜயலெட்சுமி திடீரென வீரலெட்சுமியுடன் கூட்டு சேர்ந்து காவல்நிலையத்தில் சீமானைப்பற்றி புகார் அளிக்க, விசாரணைக்காக சீமானை காவல்துறை அழைக்க, சீமான் விரைவில் கைது செய்யப்படுவார் என மக்கள் கதைக்க மனுவில் கையெழுத்து  இட்ட ஈரம் கூட காயவில்லை அதற்குள் இத்தனை டிவிஸ்ட் ஆகிப்போச்சே மஹா,

அப்படி என்ன தலைவரே டிவிஸ்ட்,

 டிவிஸ்ட்க்கா பஞ்சம் முன்னாள் இயக்குநர் ஆச்சே மஹா ஆனால் திரைப்பட இயக்குநரின் சொந்த வாழ்க்கையிலேயே  இவ்வளவு டிவிஸ்ட் ஏற்படும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்ன தலைவரே சொல்றீங்க.

I.N.D.I.A கூட்டணி வேலைக்கு ஆகாது நம்ம நம்ம மாநிலத்தில் கவனத்தை செலுத்துவோம் காங்கிரஸ் எப்படி போன நமக்கு என்ன  என சில திமுக  பெருந்தலைகள் முதல்வர் காதை கடித்து இருக்கிறார்கள் அதற்கு முதல்வர் தலைவரைப்பற்றி அவர் பேசாத பேச்சா அவரோட கூட்டணி சேர்ந்தா நம்மள மக்கள் என்ன நினைப்பாங்க என கேட்க வைகோ பேசாத பேச்சா தலைவரே அவர் இப்போ நம்மகூட இல்லையா மக்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா மறந்துடுவாங்கா என  சொல்ல அப்புறம் என்ன என சமாதனப்பட்டவர் காங்கிரஸை கை கழுவும் முடிவுக்கு வந்து விட்டதாம் திமுக,

எப்படியும் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கப்போகிறது அப்புறம் எதற்காக காங்கிரஸை ஆதரித்து வம்பை விலை கொடுத்து வாங்கணும்னு சொல்லி தேர்தலில் தனித்து நிற்போம் பின்னர் ஆதரவளித்து விடுவோம்னு பேச்சு ஓடிகிட்டு இருக்காம் அறிவாலயத்தில் என்ன தலைவரே என்ன சொல்றீங்க தொப்புள் கொடி உறவு அது இதுனு கதைத்துக்கொண்டு இருக்கும் சீமான் இதற்கு ஒப்புக்கொண்டாரா அதெல்லாம் கரெக்டா மருமகன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துட்டாராம் மஹா ,

சரி தலைவரே என்ன நடந்துச்சுனு சட்டு புட்டுனு சொல்லுங்க. வழக்கு போட்டு உள்ளே தள்ளினால் உங்கள் ஆட்கள் எல்லாம் கேப்டன் ஆட்கள் மாதிரி பாதை மாறிடுவாங்க அதுக்கு பதில்ல எங்ககூட வந்துடுங்கண்னு தூபம் போட்டிருக்காங்க சரி ஆனா ஒண்ணு காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் அதனால காங்கிரஸை கழிட்டி விட்டுட்டு நல்ல முடிவை சொல்லுங்க எங்கிட்ட 10 சதவிகித வாக்கு இருக்குனு முரண்பிடிச்சு இருக்காரு சீமான்

சரி தலைவரே அப்புறம் திமுக என்ன சொல்லுச்சாம் உள்ளே வெளியே விளையாட்டு இன்னும் முடிவாகல இது உங்க கையிலதான் இருக்கு இரண்டு திராவிட கட்சியை விட்டா தமிழ்நாட்டுக்கு நாதி இல்லைனு நாசுக்கா சொல்லி புரிய வச்சிருக்காங்க தெளிய வச்சிருக்காங்க என்ன தலைவரே சொல்றீங்க இப்படித்தான் யாரோடவும் கூட்டணி கிடையாதுனு சொல்லிட்டு விஜயகாந்த் அதிமுக போனாரு என்ன ஆச்சுனு மடக்கினாங்களாம்

சரி தலைவரே டிவிஸ்ட் அவங்க கொடுக்கறதைவிட நீங்க கொடுக்கற பில்டப் ரொம்ப பெருசா இருக்கே

பொறு மஹா பொறு

எவ்வளவு நேரம்தான் பொறுக்கறது மெயின் பிச்சரை ஓட்டுங்க தலைவரே

அவசரப்பட்டா அப்புறம் படம் நல்லா வராது பொறு பொறு இப்பொழுதைய நிலவரத்தை மட்டும் சொல்றேன் சீமானுக்கு இரண்டு என முடிவாகி இருக்காம்

என்னது டெபுலயே டபுலா 6 சதவிகிதம் வாக்குவங்கி வச்சிருக்கிற காங்கிரஸுக்கு 10 கொடுக்கணும் அதற்கு காங்கிரஸை கழட்டி விட்டுட்டு இவருக்கு ரெண்டை கொடுத்துடுவோம்னு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு மஹா

அப்படினா ஒரு கட்சியை கழட்டி விட்டுட்டு இன்னொரு கட்சியை சேர்க்க போறாங்க அப்படித்தானே தலைவரே

 
அறிவாலய வட்டாரத்தில் இப்படித்தான் பேச்சு போய்கிட்டு இருக்கு, தேர்தல் நெருங்க நெருங்க பார்ட் ஒன் பார்ட் டூ வரலாம் மற்றதைப்பற்றி அப்புறம் பேசலாம் மஹா

அப்படினா கருவாடு மீனாகும் கறந்தபால் மடிபுகுமா தலைவரே. காங்கிரஸைப் பணிய வைப்பதற்காகத்தான் இந்த காத்து, கருப்பு விளையாட்டு என்று ஒருதரப்பு சொல்கிறது மஹா பார்ப்போம் என்ன நடக்கிறது என்று… அப்படினா இரண்டு நடிகர்கள் திமுக கூட்டணிக்கு பிரச்சாரத்துக்கு ரெடி அப்படி தானே தவைவரே. 

யாமறியோம் பராபரமே, அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணம் மஹா
மேற்கொண்டு நம்ம சோர்ஸ் தகவல் கொடுத்தா உன்னை அலைபேசியில் அழைக்கிறேன். இன்று போய் நாளை வா அப்படிதானே தலைவரே. சரி சரி சட்டுபுட்டுனு  கிளம்பு கிளம்பு மஹா தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *