SPECIAL INTENSIVE REVISION (SIR) சிறப்பு திருத்தம் குறித்த விளக்கக் கூட்டம் திருச்சி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை (ex ips) அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது…,
நாம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் பீகார் போன்று வெற்றி வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது. திமுக பயந்து போய் உள்ளது ஏனென்றால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 30 வாக்காளர்கள் இறந்துள்ளதாக காட்டுகிறது 40 பேர் வெளியூர் சென்றுள்ளதாகவும் மொத்தம் ஒரு பூத்தில் மட்டும் 95 பேர் இல்லை என காட்டுகிறது. ஒவ்வொரு தொகுதிகளும் நமக்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்கு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
அந்த வாக்கு அனைத்தும் திமுக உடைய வாக்கு. அந்த வாக்கை கட் செய்தால் மட்டும் போதும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று விடும். உறுதியாக NDA கூட்டணி வெற்றிபெறும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments