திருவெறும்பூர் தொகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பழங்கானாங்குடி ஊராட்சியில் உள்ள பழங்கனாங்குடி கிராமம், பூலாங்குடி, பூலாங்குடி காலனி, வடக்கு தேனீர்பட்டி, தெற்கு தேனீர்பட்டி, நரிக்குறவர் காலனி துப்பாக்கி தொழிற்சாலை, ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழங்கனாங்குடி கிராமம் மாரியம்மன் கோவில் அருகே உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது
மேலும் இந்த முகாமிற்கு திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, சமூகத் திட்ட துறை தனிதாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து
முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்த பூலாங்குடி பகுதியைச் சேர்ந்த விஜயா மற்றும் சிவசங்கரிக்கு பெயர் திருத்த அட்டையை வழங்கி, பூலாங்குடியை சேர்ந்த ராமன் மற்றும் பழங்கனாங்குடியை சேர்ந்த சுதாகர் ஆகியோருக்கு நத்தம் பட்டா வழங்கியும் ,இதே போல் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பூலாங்குடியை சேர்ந்த ரமேஷ் மற்றும் நாகரத்தினம் செல்வ ஜோதி, நிர்மலா, சங்கீதா மல்லீஸ்வரி ஆகியோருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையையும் வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளின் பணிகளையும்
அலுவளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இதனையடுத்து பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும் என அதிகாரியிடம்
எடுத்துரைத்தார் மேலும் இந்த முகாமில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், நவல்பட்டு கயல்விழி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுதாகர், இலந்தைப்பட்டி மாரிமுத்து, உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
Comments