திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கான்வென்ட் ரோடு,
அருணாச்சலம் நகர்,
சிம்கோ காலனி,
ஆர்.எஸ்.எம். பிள்ளைத்தெரு,
காலனி மெயின் ரோடு,
சக்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் அமைச்சர் நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, ஒரு தந்தை தனது கைக்குழந்தையை அமைச்சரிடம் நீட்டினார். உடனே அக்குழந்தையை வாஞ்சையுடன் தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரம் சென்ற இடமெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழிநெடுகிலும் திரண்டு நின்று அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவருக்குப் பொன்னாடை அணிவித்தும், மலர் தூவியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
மக்களின் இந்த அலைகடலெனத் திரண்ட வரவேற்பு, அரசின் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்ததையே காட்டுகிறது” எனப் பிரச்சாரத்தின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம்,மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments