சட்டமன்றதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நன்நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பறக்கும் படையினர் மற்றும் நிலைகுழுவினர், கண்காணிப்பு குழுவினர் என பலரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகணேசன் உத்தரவின்பேரில், தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் சுபத்ரா மற்றும் வேளாண்துறை பொறியாளர் அசோகன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் அடங்கிய பறக்கும்படையினர் ரயில் நிலையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகளில் உள்ள பயணிகளின் உடைமைகளையும், அதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து
மயிலாடுதுறை செல்லும் ஜன்சதாப்தி ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளையும் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் மற்றும் தமிழக இருப்புப்பாதை போலீசாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments