Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தவெகவினரை விலைக்கு வாங்க எதிரிகள் துடிக்கின்றனர் – கு.ப. கிருஷ்ணன் பேட்டி

தமிழக வெற்றி கழக டெல்டா மண்டல கண்காணிப்பாளர்,முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்து எதிரிகள் பொறாமை கொள்கிறார்கள். அந்த பொறாமையால் தொண்டர்களை விலை பேச பார்க்கிறார்கள். எனவே தொண்டர்கள் யாரும் அவர்களுடைய வலையில் சிக்காதீர்கள்.

தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருங்கள். ஆசை வார்த்தை கூறுவார்கள். அவர்களுடைய முயற்சியை தடுத்து நிறுத்துவது நம்முடைய பணியாகும்.அவர்கள் வீசும் வலையை கிழித்து எறியுங்கள். நம்முடைய பணி வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.ஜனநாயக படத்தை விஷமிகள் வெளியிட்டு உள்ளார்கள். ஜோதிமணி எம்பி காங்கிரஸ் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார்.எங்களுடைய தலைவர் பிரச்சாரத்திற்கு மட்டும் தான் போலீசார், தேர்தல் கமிஷன் பல நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. மேலும் என்னை விலைக்கு வாங்க யாரும் பிறக்கவில்லை.தேர்தல் களத்தில் முதல் இடத்தில் த.வெ.க. உள்ளது. இரண்டாவது இடத்திற்கு தான் திமுக, அதிமுக இடையே போட்டி நடந்துக் கொண்டிருக்கிறதுபாஜகவின் பி டீமாக திமுக, அதிமுக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் விஜய் பிரச்சாரம் செய்வார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார்.

அவர் தேர்தல் பிரச்சாரத்தை பார்த்துக் கொள்வார். பொதுவாக தேர்தல் என்றால் தலைவர்கள் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் ஓட்டு கேட்பார்கள்.
ஆனால் இங்கு விஜய்க்கு ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.தங்களுடைய பெற்றோரிடம் விஜய்க்கு ஓட்டு போடுமாறு பாசத்துடன் சொல்கிறார்கள் இந்த தேர்தலில் பாசம் வெல்லும் என்பது முடிவில் தெரியவரும்.இவ்வாறு குப. கிருஷ்ணன் கூறினார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *