திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம்/திருச்சி சார்பில் 14.12.2025 முதல் 20.12.2025 வரை “மின் சேமிப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதன் நிறைவு விழாவான 20.12.2025 (சனிக்கிழமை) மதியம் 3:30 மணியளவில் ஜமால் முகமது கல்லூரி முன்பு பொறிஞர். S.செந்தாமரை, மேற்பார்வை பொறியாளர்/திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம் திருச்சி அவர்கள் கொடியசைத்து மாபெரும் பேரணியை துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், நிர்வாக மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு பற்றிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இப்பேரணியானது ஜமால் முகமது கல்லூரியிலிருந்து ஆரம்பித்து மேற்பார்வை பொறியாளர்/மன்னார்புரம்/மெட்ரோ/திருச்சி அலுவலத்தில் நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில் திருச்சி மண்டல பொறியாளர் பொறிஞர்.M.கீதா அவர்கள் கலந்து கொண்டு மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
அவரை தொடர்ந்து, பொறிஞர். S.செந்தாமரை, திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம்/திருச்சி அவர்கள் மின் பாதுகாப்பு மற்றும் மின் சேமிப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். இறுதியாக பொறிஞர்.முத்துராமன், செயற்பொறியாளர்/இகா./நகரியம்/ திருச்சி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இத்துடன் விழா இனிதே சிறப்புடன் நிறைவுற்றது.
மேற்கண்ட செய்திக்குறிப்பினை தங்களது பத்திரிகையில் வண்ணப் புகைப்படத்துடன் வெளியிடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments