திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது.
திருச்சி மார்ச் 23, சட்டமன்ற தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சட்டமன்ற தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றதொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. தற்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் இடம் பெறும் வாக்குப்பதிவு கருவி 7,906-ம், கட்டுப்பாட்டு கருவி 3,541-ம், ஒப்புகை சீட்டு வழங்கும் வி.வி.பேட் கருவி 3,810-ம் – இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த எந்திரங்களின் முதல் கட்ட சோதனை நிறைவடைந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரம் ஆகியவற்றின் முதல்கட்ட ஒதுக்கீடு குறித்த விரிவான வழிமுறைகள் குறித்து நடைமுறை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இது, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.eci.gov.in/evm-vvpat) இடம் பெற்றுள்ளது.
முதற்கட்ட ஒதுக்கீடு: அந்த வழிமுறைகளின் படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பயன்படுத் தப்படவுள்ள மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள், தாங்கள் செலுத்திய வாக்கினை சரி பார்க்கும் கருவிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு மூலம் தொகுதி வாரியாக முதலாவது சம வாய்ப்புக்கு உட்படுத்தப் பட்டு ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்
மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தலை மையில் தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றது. பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் கருவிகள் ஆகியவற்றின் விவர பட்டியல்கள் தேசிய, மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு பிறகு மதியம் மாவட்ட காப்பறை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அவை மாவட்ட காப்பறையில் இருந்து பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும்.
மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்படுத்தப்படவுள்ள
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பட்டியல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். அதன்பின்னர், அவை மண்டல வாரியாகவும். வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும் என்று மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments