திருச்சி விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் சுமார் 15 நாட்களாக கேட்பாரற்று நிலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இது TN63 என்ற எண் பதிவு கொண்ட இந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. இதனால் அந்த வாகனத்தின் முன் பகுதியில் உள்ள சக்கரத்தில் போலீசார் வளையம் போட்டு பூட்டி உள்ளனர்.

ஆனால் இதுவரை இந்த வாகனம் தேடி யாரும் வரவில்லை. மேலும் விமான நிலையத்தின் அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதற்காக சில வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வாகனமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும், காரின் எண்ணை வைத்து யாருடைய பெயரில் உள்ளது என்றும், அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் காரை நிறுத்தி விட்டு சென்றவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments