Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி தீ குளிக்க முயற்சி – திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா, மூங்கில்பட்டி உன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 31). விவசாய தொழில் செய்து வரும் பழனிச்சாமி, மனைவி பிரியா ( வயது 26 ), மகன் ரித்திக் ( வயது 2 ) மூவரும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

 Advertisement

இந்நிலையில் தன்னுடைய வீட்டிற்கு வரக் கூடிய பாதையை பள்ளம் தோண்டி வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து வரும் பெரிய பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனைவி, குழந்தையுடன் வந்த பழனிச்சாமி தான் கொண்டு வந்த பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். 

பின்னர் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து தீ குளிக்க முயன்ற பழனிச்சாமியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *