Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜேசிபி இயந்திரத்தை பறித்து சென்ற நிதி நிறுவனம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சார்ந்தவர்கள் விவசாயிகளான ஜோதி, காத்தான் தம்பதியினர். இவர்கள் பாலாஜி பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் தங்களது ஜேசிபி இயந்திரத்தை அடகு வைத்து விவசாய தேவைக்காக 3 லட்சத்து 50 ஆயிரம் கடன்பெற்றிருந்தனர்.

வாங்கிய கடனுக்கு மேலாக வட்டியுடன் பணத்தைக் செலுத்தியும் கூடுதலாக ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து ஜேசிபி இயந்திரத்தை பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து புகார் அளித்தும் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறையைக் கண்டித்தும், விவசாயிகளின் சொத்துக்களை பறிக்கும் நிதி நிறுவனத்தை கண்டித்து

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கொடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி விவசாயிகளிடம் கோரிக்கை குறித்து கேட்டிருந்தார். பின்னர் அவர்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *