தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரதான சாலையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நடைபெறும் விவசாயிகள் போராட்ட கோரிக்கைகளை செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும் தங்களை டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திறகு செல்ல அனுமதி வழங்க வேண்டும் இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் விவசாயிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் சாலையில் படுத்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட தண்டபாணி விவசாயி மயக்கமடைந்தார். பின்பு சாலையில் ஓரமாக படுக்க வைத்தனர். விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW







Comments