தமிழக முதல்வர் விவசாயிகளின் குறைகளை கேட்காமல், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் விவசாயிகளுக்கு நாமம் போட்டதை கண்டித்து,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உடலில் நாமம் இட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து சுமார் 56 தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அனைத்து விவசாய கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்,
பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தங்களது உடலில் விவசாயிகள் பட்டை நாமம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்
யாரும் கண்டுகொள்ளாததை கண்டித்து ஒரு படி மேலாக கொடூரமாக மலம் உண்ணும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments