சென்னை மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வை துறை ஆணையர்
அவர்களின் கடிதத்தில் 01.02.2026 அன்று உலர்நாளாக (Dry Day)
தெரிவிக்கப்பட்டுள்ளதால்,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 01.02.2026 (ஞாயிறு) வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும்,
அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்படவேண்டும்.
மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments