திருச்சி கே.சாத்தனூரை பகுதியை சேர்ந்தவர் சலீமா. இவர் நேற்று (04.11.2025) காலை திருச்சி மாநகர பேருந்தில் கே.கே நகரிலிருந்து-காந்தி மார்க்கெட் பயணித்தபோது பஸ்ஸில் தனது செல் போனை [ VIVO ஆண்ட்ராய்டு மொபைல் போன் ] பஸ்ஸின் சீட்டின் பக்கவாட்டில் தவறவிட்டதாக தெரிகிறது. மார்கெட் ஏறிய பயணி ஒருவர் செல்போனை கண்டெடுத்தார். செல்போனை தவறிவிட்ட பெண் 2 மணி நேரம் கழித்து வேறுறொரு எண்ணிலிருந்து அந்த செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது செல்போனை கண்டெடுத்தவர் ஸ்ரீரங்கம் வந்துவிடுவே, உங்களது செல்போன் மற்றும் செல் கவரில் ரூ.500/- ரொக்க பணம் பத்திரமாக உள்ளது கவலை வேண்டாம்.
எனது பையனிடம் கொடுத்து அனுப்புகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதன்படி இன்று (05.11.2025) காலை 10 மணியளவில் கே.கே நகருக்கு சென்று நேரில் சந்தித்து சலீமாவிடம்
செல்போனையும், பணத்தையும் கொடுத்தார். சக பயணிக்கு நன்றி அவர் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments