திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம், 06.01.2025ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றுடன் 100 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 100 எதிரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருச்சி மாவட்ட சரித்திரத்தில் இதுவரை இல்லாத ஒன்றாகும். எஸ் பி ஆகா பொறுப்பேற்ற பத்து மாதத்தில் 100 எதிரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து செஞ்சுரி அடித்த முதல் எஸ்பி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்னும் இன்னும் ஏராளமான குண்டர் கருப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வழக்குகள் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments