திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர்கள் வெல்லமண்டி.ந.நடராஜன். ப.குமார்,மு.பரஞ்ஜோதி ஆகியோர்களின் செய்தி அறிக்கை …..
தமிழக முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி K. பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கின்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகின்ற 11.02.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு திருச்சி சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரி அருகில் V.S.முகமது இப்ராஹிம் மஹாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர். எதிர்க்கட்சி துணை தலைவர் O.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக. கிளை கழக, மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, அம்மா வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு. விவசாயப் பிரிவு. மீனவர் பிரிவு, இலக்கிய அணி. மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், Ex.கோட்டத் Ex.உள்ளாட்சி தலைவர்கள். பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், தலைடர்கள். இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி கலை பிரிவு, செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம், திருச்சி மாவட்டம் கேட்டுகொண்டுள்ளது.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           37
37                           
 
 
 
 
 
 
 
 

 10 February, 2022
 10 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments