மருத்துவப் பணிகளுக்கான தேர்வாணையம் (MEDICAL SERVICE SRECRUITMENT BOARD) மருந்தாளர் பதவிக்கு 889 பணிக்காவியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்போட்டித்தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்வி வளாகம்,

திருச்சியில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை (01.11.2022) அன்று முதல் துவங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பு கோட்பாடு & செயல்முறை (Theory & Practical) வகுப்புகள் மற்றும் வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளை உள்ளடக்கியது.
இப்பயிற்சி வகுப்பில் மருந்தியல் டிப்ளமோ அல்லது இளங்கலை மருந்தியல் அல்லது மருந்தக மருத்துவர் போன்ற கல்வித்தகுதிகள் உடைய திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments