Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காஜாமலையில் குரூப்–2 தேர்வு ரத்து: அறியாமல் தேர்வு எழுதிய தேர்வாளர்கள்

தமிழகம் முழுவதும் இன்று
குரூப் 2, குரூப் 2A நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தமிழக முழுவதும் தேர் எழுதுவதற்காக மையங்களும் அறிவிக்கப்பட்டது.

தேர்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகளுக்கு சென்று தேர்வு எழுத ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சென்னையில்
ஏற்பட்ட தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் மாற்றி அமைத்ததால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக முழுவதும் தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பு நீடித்து வந்தது.

இந்நிலையில் திருச்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் கல்லூரியில் தற்போது மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர்

தேர்வு ரத்து செய்ததை தகவல் அறிந்த பெற்றோர்கள் தற்போது கல்லூரி முன்பு நின்று வருவதால் பரபரப்பு நிலவியது

திருச்சி மாநகர் தேர்வு மையத்தில் 356 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
கல்லூரி முன்பு பாதுகாப்பு பணிகள் காவல்துறைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தேர்வு மையத்திலிருந்து வெளியே வந்த தேர்வாளர்கள் தங்களது எதிர்பார்ப்பு பொய்து விட்டதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதேபோல் அவரது பெற்றோர்கள் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிக்காக மாநில முழுவதும் தடை செய்தது வருத்தத்துக்குரியது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு வருகிற 22ஆம் தேதி மீண்டும் இந்த தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *