பாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம். கவனிக்குமா காவல்துறை?

பாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம். கவனிக்குமா காவல்துறை?

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பில் கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், செல்லும் பகுதி, விராலிமலை, கல்லுக்குழி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமானப்பணி 7 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மன்னார்புரம் செல்லும் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் நிலம் கிடைக்காததால் பாலப்பணி நினைவு பெறாமல் பாதியிலேயே நிற்கிறது. 


இந்நிலையில் பாதியில் நிற்கும் பாலத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் தொடக்கத்தில் இருந்து மத்தியில் வரை மட்டுமே மின்விளக்குகள் எரிகிறது. ஆனால் பாலத்தின் மத்தியிலிருந்து முடிவு பெரும் பகுதியில் வரை மின் விளக்குகள் எரியாமல் இருட்டாக இருக்கிறது. இதை பயன்படுத்தி சிலர் மது அருந்துவதும், புகை பிடிப்பதற்கும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுமட்டுமின்றி மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை உடைத்து படுவதால் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் பெரும் சிரமத்திற்கும், அச்சத்துடனே நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பாதியில் நிற்கும் பாலப்பகுதிக்கு செல்லக்கூடாது என தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தாலும், தடுப்புகளை உடைத்து எறிந்து அத்துமீறி பொதுமக்கள் செல்கின்றனர். மன்னார்புரம் செல்லும் இந்த மேம்பாலம் பாதியில் நிற்பதால் குற்றச்செயல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடனடியாக காவல்துறை இதை கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU