திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் பகுதி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் நந்தவனம் பகுதியில் குடியிருந்து வரும் 35 குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு பட்டா, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி செய்து தரக் கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக
20.03.2026 அன்று ஜீயபுரம் காவல்நிலையத்தில் கொடுத்த கடிதத்தில் கோரப்பட்டதற்கிணங்க சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு இன்று (24.03.2025) மாலை 5:00 மணியளவில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரம்:
வட்டார வளர்ச்சி அலுவலர், அந்தநல்லூர். வருவாய் கோட்டாட்சியர், ஸ்ரீரங்கம், வருவாய் ஆய்வாளர், அந்தநல்லூர், காவல் உதவி ஆய்வாளர், ஜீயபுரம் காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி. உதவிப்பொறியாளர், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம். 6.கிராம நிர்வாக அலுவலர், திருப்பராய்த்துறை கிராமம்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டது:
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பராய்த்துறை கிராமம், நந்தவனம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தெருக்குடிநீர் குழாய் அமைத்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கலந்து ஆலோசித்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருக்கோவில் இடத்திற்கு அடிமனை வாடகை இரசீது வழங்குவது சம்பந்தமான கோப்பு சென்னை, இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டது. கருத்துருவின் நகல் கிராம பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கருத்துகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு மனதாக தேர்தல் புறக்கணிப்பு முற்றிலும் கைவிடுவது என கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அடிப்படை வசதி இன்றி வாழ்ந்த மக்கள் கூறியதாவது, ” தற்காலிகமாவது மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுத்துவிட்டால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments