திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி
அடுத்த யாகபுரம் பகுதியில் வசிப்பவர் செல்வம் – 40.
இவர் வளர்த்து வரும் கால்நடைகளின் உணவிற்காக 150 க்கும் மேலான வைக்கோல் கட்டுகளை விலைக்கு வாங்கி அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஹாஸ்பிட்டாஸ் கொட்டகையில் அடுக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென வைக்கோல் தீ பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக. அருகில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீட்டின் அருகில் உள்ளவர்களும் குடங்களில் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments