Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பால் பண்ணை–துவாக்குடி ‘மரண சாலை’க்கு சேவை சாலை கோரி 4ஆம் நாள் பட்டினிப் போராட்டம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கிய மரண சாலை (திருச்சி, பால் பண்ணை- துவாக்குடி)

சேவை சாலை அமைக்கக்கோரி தொடர்ச்சியாக நான்காவது நாளாக பட்டினி போராட்டம் தொடர்கிறது.

எங்கள் தலைமுறை இறப்பை எதிர்கொள்ள கூடாது என்பதற்காக அதிகாரிகள் பலரின் எதிர்ப்பை பட்டினி கிடந்து நாங்கள் எதிர்கொள்கிறோம்.

இன்றோ அல்லது நாளையோ அச்சாலையில் நாங்கள் பயணித்து மரணிப்பதை காட்டிலும் எதிர்வரும் நாட்களில் யாரும் நம் சகோதர சகோதரிகள், தாய்மார்கள், குழந்தைகள், மாணவர்கள் யாரும் மரணித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எங்கள் உடலை வருத்தி உங்கள் அனைவரின் ஆதரவோடு நான்காம் நாள் தொடர்கிறோம்.

உண்ணாவிரதம் இருக்கும் தோழர்கள் S. ராஜ்குமார் புறநகர் மாவட்ட செயலாளர், CPI, S. ரஞ்சித் குமார், வழக்கறிஞர், M.தமிழரசன், AIYF மாவட்ட செயலாளர், M.சிவசங்கரன், CPI மாவட்ட குழு, A. நிவாஸ், CPI

கையூட்டு பெற்றுக் கொண்டு சேவை சாலைக்கான இடங்களில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *