திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பெயரில், (S.Sivarasu) மாவட்ட ஆட்சித்தலைவர் புகைப்படத்துடன் பொது மக்களையும், அரசு அலுவலர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் 6378370419 என்கிற எண் கொண்ட வாட்ஸ்அப் மூலம் வங்கி கணக்கிலும், அமேசான் போன்ற வாட்ஸ் அப் செயலிகளில் ஆன்லைன் வாயிலாக 
கிஃப்ட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்திடக் கேட்டும் செய்திகளை 
அனுப்பி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையில் இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர் மீது புகார் அளித்து, கடும் நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மேற்கண்ட செல்பேசி எண் உள்ளிட்ட போலியாக உருவாக்கப்படும் வௌ்வேறு செல்போன் எண்கள் வாயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து, உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவித்திட என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments