திருச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இன்று திமுக வேட்பாளர் பட்டியலில் அறிவித்துள்ளது. திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதியில் 8 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிடுகிறது. அதில் ஒன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை முசிறியில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மகன் கருணை ராஜாவு போட்டியிடுகிறார். இதே போல் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை அங்கே புதிய வேட்பாளராக பாரி வள்ளலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
திருச்சி கிழக்கில் அமைச்சர் நேரு, திருவரம்பூரில் மகேஸ் இருவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதேபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பழனியாண்டிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் புதிதாக துரைராஜ்க்கு வாய்ப்பு வழங்கி திமுக அறிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments