திருச்சி தென்னூர் பாபு செட்டி மெயின் ரோட்டில் Aspire Academy தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை முன்னிட்டு விடியற்காலை 4 மணி அளவில் கணபதி பூஜை, கோ பூஜை மற்றும் தியாகத்துடன் தொடங்கியது.

இந்த தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாநகராட்சி மேயர் எமலிரீச்சார்டு மற்றும் ராயல் பர்னிச்சர் உரிமையாளர் சாத்தப்பன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். இந்த அகாடமியில் எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஸ்கூல் டியூஷன், எக்ஸ்ட்ரா கரிகுலர், லாங்குவேஜ், ரீடன்ஸ், ரைட் அண்ட் ஸ்பீச், கம்ப்யூட்டர் கிளாஸ், பிளஸ் ஒன் பிளஸ் டூவிற்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் அண்ட் பிசி, ட்ரைனிங் ஜாப், என்ட்ரன்ஸ் கோச்சிங் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது.


இவ்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோரை அகாடமி உரிமையாளர் மோகன்ராஜ் மற்றும் அவரது தந்தை கணபதி, தாயார் சகுந்தலா ஆகியோர் வரவேற்றனர். மேலும் இந்த அகாடமி உரிமையாளர் மோகன்ராஜ் கூறுகையில்…… தற்பொழுதுள்ள மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. முதல் வகுப்பில் இருந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.


ஒலிம்பியர், சயின்ஸ் எக்ஸாம் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இது மட்டும் இல்லாமல் மொழிபெயர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ், ஜப்பானீஸ், சைனீஸ் போன்ற மொழிகள் கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாடு செல்வதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆர்கிடெக்சர், டிபன்ஸ், நீட், பேஷன் டெக்னாலஜி இது போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குகிறோம்.

இளநிலை படிப்பு முடித்து முதுநிலை படிப்புகளை ஐஐடி, என்ஐடி, தொடர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு ஜாம் என்ற தேர்வு உள்ளது. இது மட்டுமின்றி சிஎம் ஐ கேட் போன்ற நுழைவு தேர்வுகள் உள்ளது. இதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால் ILTS, GRE போன்ற தேர்வுகள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூடுதலாக திறமைகளை கற்றுக்கொள்ள வேண்டும் விரும்பினால் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு மயிலும் மாணவர்களுக்கு விவி மேக்ஸ், அபாகஸ் டிராயிங், போன்றவை இந்த அகாடமி கற்றுத் தரப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           218
218                           
 
 
 
 
 
 
 
 

 12 June, 2024
 12 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments