திருச்சி நகரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகர எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து விபத்துக்கள் அதிகம் நிகழும் போது இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன்படி சென்னை புறவழிச் சாலையொட்டி சஞ்சீவி நகர் சந்திப்பு, நகர எல்லையையொட்டிய ஒய் சாலை, கொள்ளிடம் பைபாஸ் சந்திப்பு, எடமலைப்பட்டிபுதூர் சந்திப்பு, கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை எஸ்ஐடி சந்திப்பு, எடமலைப்பட்டிபுதூர் – மதுரை பைபாஸ் சந்திப்பு உள்ளிட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும்போது விதிமுறைகளை பின்பற்றாமல் திடீரென வாகனத்தைத் இருப்பதால் அதிக விபத்துகள் நேர்கின்றன. அதேபோல் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் சிறு நகரங்களில் இருந்து திருச்சி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதிக விபத்துகள் நிகழும் 9 இடங்களை அடையாளம் கண்டறிந்து அந்த இடங்களில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 9 இடங்களிலும் வாகன தடுப்புகள் வைக்கவும், மின்விளக்கு வசதியை மேம்படுத்தவும், பழுதடைந்த சாலைகளை செப்பனிடும், எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments