Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்தியாவிற்கு 196 லட்சம் கோடி கடன் உள்ளது. கடனை பற்றி பேச பியூஸ் கோயலுக்கு தகுதி இல்லை – திருச்சியில் சீமான் பேட்டி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்…

மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயல் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார் என்ற கேள்விக்கு..,

இந்தியாவிற்கு 196 லட்சம் கோடி கடன் உள்ளது. கடனை பற்றி பேச பியூஸ் கோயலுக்கு தகுதி இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கடன் சுமை இருக்கிறது. ஜெயலலிதாவை சிறையில் போட்டது பாஜக தான். மீண்டும் அதே கட்சியில் அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள். தேர்தல் வந்துள்ளது அதனால் அப்படி பேசுகிறார்.

திராவிட கட்சிகள் 10 லட்சம் கோடி கடனை வாங்கி மக்களுக்கு செய்த திட்டங்கள் எதுவும் இல்லை. இலவசங்களை தவிர்த்து எந்த திட்டமும் செய்யவில்லை.

மிகுந்த வலியுடன் தேர்தலை சந்திக்கிறேன் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு..,

840 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 480 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் விஜய்க்கு வலியாக தெரியவில்லை. 2008, 2009 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டனர். என் மீது 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் போகாத சிறை இல்லை. விஜய்க்கு என்ன வலி இருக்கிறது என்று கூறுங்கள்..?

14 ஆண்டுகளாக என் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துவிட்டு எந்த நாடுகளுக்கும் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். காடுகள், மலைகள் ஆறுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் விஜய்க்கு வலியாக தெரியவில்லையா..?

4 லட்சம் வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சியை, 36 லட்சம் வாக்குகள் வாங்க வைத்தது மக்கள்தான். இன்னும் பதினைந்து நாள் தான் உள்ளது. தேர்தலில் தெரிந்து விடும் மக்கள் யார் பக்கம் என்று.

FCRA சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு…,

மக்களை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஹிட்லர் கூறுவார். மக்களை பதட்டமாக வைத்துக் கொண்டால் தான் ஆட்சியில் நடக்கும் தவறுகளை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று ஹிட்லர் சொல்வார். என் ஆர் சி, எஸ் ஐ ஆர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேர்தல் முடிந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்றார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *