திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 24.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை நகராட்சி நிருவாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் முன்னிலையில் இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இலால்குடி நகரம் திருச்சி-அரியலூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இலால்குடி நகராட்சியை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ள மக்கள் அவர்களின் அன்றாட தேவைக்காக இலால்குடி நகரை அணுகுவது அத்தியாவசியமாக உள்ளது. இதன் பொருட்டு இலால்குடி நகரில் தற்பொழுது உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் உள்ளது.
புற நகர் பேருந்துகள் தற்போதைய பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு செல்லாமலே புறவழியாகவே செல்வதால் நகராட்சியின் வருமானம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். ஆகையால் இலால்குடி நகராட்சிக்கு ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டு (21.11.2024 அன்று மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களால் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையம் 40 பேருந்து நிறுத்தங்கள் 120 கடைகள் 2 எண்ணிக்கை உணவகம், 2 எண்ணிக்கை ATM, 1 எண்ணிக்கை டிரைவர் தங்குமிடம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், இதர அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 5.32 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள நகராட்சி அலுவலகம் 1000 சதுர பரப்பளவில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நகராட்சிக்கு தினசரி சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 6-வது மாநில நிதி ஆணையம் சிறப்பு நிதியின் கீழ் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் சுமார் 7000 சதுரடி பரப்பளவில் அலுவலக வளாகம் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் (06.10.2024) அன்று அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் நகராட்சி நிருவாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் முன்னிலையில் இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் மாதவன், இலால்குடி நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம், ஆணையர் மா.புகேந்திரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments