Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூரில் தீவிர வாக்கு சேகரிப்பு- மகளிர் உரிமைத் தொகை உயர்வு வாக்குறுதியுடன் கதிரவன் பரப்புரை

மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டுகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில், திருவெள்ளரை, திருப்பஞ்சலீ ஊராட்சிகளில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து எம்எல்ஏ எஸ் கதிரவன் பேசியதாவது.

2023-ம் ஆண்டு அண்ணாவின் பிறந்தநாளில், பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகையை, உரிமைத் தொகையாக வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, இதுவரை ஒரு மாதம் கூட விடாமல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் போது, இந்த தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


அதேபோல் தமிழக முதல்வர் தமிழகத்தின் தலைசிறந்த கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 90% குடிநீர் பிரச்சினைகள் அனைத்து பகுதிகளிலும் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10% பணிகள் நான் மீண்டும் பதவி ஏற்றவுடன் முதல் பணியாக செய்து முடிப்பேன். தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் வந்து இலவச சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் தங்கி சர்வதேச தரத்தில் இங்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாகவே பெற்று வருகின்றனர். தொகுதி முழுவதும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்புகள் கட்டிக் கொடுத்துள்ளேன். நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரி செம்மைப்படுத்தி தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாரம் இரண்டு நாட்கள் மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். மீண்டும் நான் வெற்றி பெற்றவுடன் ஒன்றியத்திற்கு ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் வழங்குவேன் அந்த இயந்திரம் எம்எல்ஏ அலுவலகத்தில் நிற்கும். பொதுமக்கள் தங்கள் பகுதி நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் வடிகால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் இன்றி தங்கள் சொந்த தேவைக்கும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக பெண்களும், மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களும் விழிப்புடன் இருந்து ஒரு

ஓட்டு கூட சிதறாமல் உதயசூரியனுக்கு அளித்து மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும். உங்கள் உரிமைத் தொகை மட்டும் இன்றி, தமிழக மக்களின் அனைத்து உரிமைகளையும் காக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ கதிரவன் பேசினார்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *