திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரன்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(51), த.பெ.பொண்ணுச்சாமி, என்பவர் கடந்த 19.01.25 அன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மர்மமான முறையில் தலையில் காயத்துடன், இறந்து கிடப்பதாக மறுநாள் காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடம் சென்று முதற்கட்ட விசாரை மேற்கொண்டு, பிரேத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் காவல் நிலைய குற்ற எண்.17/26 u/s 103(1) BNS ன் படி 20.01.26 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில், மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. காவியா அவர்களின் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையாக சம்பவ இடத்தின் அருகிலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் 20.0126 அன்று அதிகாலை

0120 மணிக்கு கையில் இரும்பு ராடுடன் உடல் தோற்றத்தை மறைத்த நிலையில் (full body covered) 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. அதனடிப்படையில் விசாரித்தபோது, காவல்காரன்பட்டியை சேர்ந்த பெண்ணை, ராதாகிருஷ்ணன் (22), த.பெ. மனோகரன் என்பவர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இதனையறிந்த சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் மேற்படி காதல் விவகாரம் தொடர்பாக, அப்பெண்ணை கண்டித்ததாகவும், இது தொடர்பான பிரச்சினை இருந்தது தெரிய வந்தது.

எனவே, மேற்படி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது காதலி ஆகியோர்களின் செல்போன் எண்களுக்கு CDR போடப்பட்டு, சோதனை செய்ததில் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னும், சம்பவத்திற்கு பின்னும் இருவரும் அலைபேசி தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான எதிரியின் உயரம், முக ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவ ஒற்றுமை செய்ததில் மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் ராதாகிருஷ்ணன்(22), த.பெ. மனோகரன் என்பவராக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது.

உடனடியாக, மேற்படி செல்போன் எண்கள் மூலம் ராதாகிருஷ்ணனின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவரை நிலையம் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இறந்து போன சிவசுப்பிரமணியன் என்பவர் தன் காதலியிடம் காதலை கைவிடுமாறு வற்புறுத்தியதால், அவர் மீது ஆத்திரமடைந்து, அவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததாக தானே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், மேற்படி இறந்து போன சிவசுப்பிரமணியை கொலை செய்வதற்கு ராதாகிருஷ்ணனின் காதலி தூண்டுகோலாக இருந்தது தெரிய வந்தது

மேலும், சேரன் 20/26, த.பெ. மனோகரன், காவல்காரன்பட்டி, (ராதாகிரு மற்றும் சிவநேச செல்வன்(19), த.பெ. லெட்சுமிநாராயணன், காலனி தெரு, க ஆகியோர்கள் மேற்படி எதிரியை தப்ப வைக்கும் நோக்கில் இருசக்கர வாகனத்திக கொலைக்கு பயன்படுத்திய பொருட்களை பதுக்கி வைக்கவும், எதிரியை பேருந்தில் ஏற்றி அனுப்பவும் உதவி புரிந்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments