Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கம்; AI முக்கியத்துவம் வலியுறுத்தல்

இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் தொடக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இவ்விழாவில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும் முதல்வருமான முனைவர் க. பாலகிருஷ்ணன் அவர்கள், கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். அனுசியா அவர்கள், துணை முதல்வர் எஸ். கார்த்திக்கேயன் அவர்கள் ஆகியோருடன் கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் சுகாசினி மற்றும் அத்துறையின் பேராசிரியை ஜெ. ஜெனிஃபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் பி. ஜெயபிரகாஷ் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் (COE) ஆவார். அவர் தனது சிறப்புரையில், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பற்றி அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதன்மீது மட்டும் சார்ந்து இருக்காமல், இணையத் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் மாணவர்கள் தங்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது உரை மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்தது.

மேலும், முதன்மை விருந்தினரால் கருத்தரங்கின் ஒரு பகுதியாக தொகுக்கப்பட்ட 300 சுருக்கக் கட்டுரைகள் (Abstract Conference Proceedings) வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வு, ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிக்கும் முக்கியமான தருணமாக அமைந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் விஜய சேகர் அவர்கள், சீனாவின் கல்வி அமைச்சகத்தின் பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் பிந்தைய ஆய்வாளர் (Postdoctoral Research Fellow) ஆக பணியாற்றி வருபவர். அவர் நிகழ்வில் உரையாற்றி, பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இக்கருத்தரங்கில் சிறந்த கட்டுரைகளை வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டு அவர்கள் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து பல்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முனைவர், Registrar எம். அனுசியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சி, ஐக்யூஏசி (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். சாந்தி அவர்கள் நன்றியுரை வழங்கியதுடன், தேசிய கீதம் ஒலிப்புடன் இனிதே நிறைவுற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *