தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது தேர்தல் பிரச்சார முறை குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
சிலர் தெரிவிக்கையில், முதல்வர் மு.க ஸ்டாலின் மீது விமர்சனம் முன்வைக்கும் விஜய், திருச்சிக்கு குறுகிய நேரத்திற்கு

மட்டுமே வருகை தருவது மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு நாள் வருகையால் அந்த பகுதி மக்களின் பிரச்சினைகளை முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
இதனிடையே, திருச்சி மண்ணைச் சேர்ந்த உள்ளூர் வேட்பாளர் G. ராஜசேகரன் தொடர்ந்து மக்களுடன் இருந்து பணியாற்றி வருகிறார் என்பதையும் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவருக்கு அதிக ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும், விஜயின் அரசியல் தோற்றம் குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், M.G.R போன்ற தலைவர்களின் பாணியை பின்பற்றுவது மட்டும் போதாது, நடைமுறை அரசியல் பணிகள் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
ஒருநாள் பிரச்சாரம் போதுமா? விஜய்க்கு கேள்வி



Comments