Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு: சீறும் காளைகள், அசத்தும் வீரர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த நிலையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றது.

இதில் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். காளைகளும் வீரர்களை தூக்கி வீசி வெற்றி பெற்று வருகின்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. போட்டியில் 800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *