Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மேள தாளம் முழங்க ஜல்லிக்கட்டு ராஜேஷ் மனுத்தாக்கல் – வித்தியாசமான பிரச்சார தொடக்கம்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் காளை மாடுகள், செம்மறி ஆடு மற்றும் சண்டை சேவல்களுடன் மேள தாளங்கள் முழங்க பேரணியாக வந்து தாலுக்கா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் கையில் வேல் ஏந்தியபடி தனது ஆதரவாளர்களுடன் காளை மாடுகள், செம்மறி ஆடு மற்றும் சண்டை சேவல்களுடன் மேள தாளங்கள் முழங்க பேரணியாக தாலுக்கா அலுவலகம் வந்தார்.
தொடர்ந்து அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதாவிடம் தனது
வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,இந்த தொகுதியில் 26 பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், 26 தேர்தல் வாக்குறுதிகளை முன்னெடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வருகிறது, நான்கு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தும் இந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் கூட இல்லை.
இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் நீண்ட காலமாக இருக்கக்கூடிய சர்வீஸ் சாலையில் பிரச்சனையை ஒரே வருடத்திற்குள் தீர்த்து வைப்பேன்.

அவ்வாறு தீர்க்கவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அடுத்தடுத்து இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு எங்கள் பிரச்சாரம் வியூகம் அமையும் என்றார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *