Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கே.என்.நேரு: உள்ளாட்சி முதல் அமைச்சர் வரை வெற்றிப் பயணம்

பெயர்: கே.என்.நேரு, பிறந்த தேதி: 09.11.1952, தந்தை பெயர்: நாராயணன் ரெட்டியார், தாயார் பெயர்: தனலெட்சுமி அம்மாள், மனைவி: சாந்தா, மகன் மகள்கள்: அருண், ஹேமா, ஆர்த்தி.

இவர் 1986 ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக இலால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்களள் தலைமையில் பால்வளம்,மின்சாரம், தொழிலாளர் நலத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

1993ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியற்றி அதன்பின் பதவி உயர்வு பெற்று தி.மு.கழகத்தின் முதன்மை செயலாளராக தற்போது வரை பணியாற்றி வருகிறார்.

1996ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இலால்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மற்றும் புள்ளியில்துறை அமைச்சராக பணியாற்றினார். 2006ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு போக்குவரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

இவர் மின்துறை அமைச்சராக இருந்தபோது தான் தமிழக விவசாயிகளுக்கு முதன் முதலாக இலவச மின்சாரம் முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலம் முழுவதும் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை திறம்பட நடத்தி காட்டினார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 1,00,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *